search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் வறட்சி"

    • கடும் வறட்சியால் நீர் நிலைகளில் வைகை நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ராமநாதபுரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாக்கள், 11 யூனியன் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள், யூனியன் கண்மாய்கள் மற்றும் தனிநபர் ஊரணிகள், பொதுப்பயன்பாட்டில் உள்ள ஊரணிகள் உள்ளன.

    அபிராமம் பகுதியிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்மாய் ஊரணிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழை காலங்களில்தான் பெரும்பாலான கண்மாய் ஊரணிகள் தண்ணீர் நிரம்பும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கண்மாய், ஊரணிகள் குளங்கள் நிரம்பவில்லை.

    கடந்த ஆண்டு பாசன வசதிக்கும், குடிநீர் தேவைக்கும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டும், அபிராமம் பகுதியை சுற்றியுள்ள பொதுப்பணி துறை கண்மாய், யூனியன் கண்மாய். ஊரணிகளில் தண்ணீர் நிரப்ப முடியாமல் போனதாலும் கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததாலும் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது.

    தற்போது கண்மாய், குளங்கள், ஊரணிகள் வறண்டுள்ளது. அபிராமம், தரைக்குடி, வல்லகுளம் என பல கிராமங்களில் உள்ள கண்மாய், குளம், ஊரணிகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கின்றன. இதனால் குளிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீர் ஆதாரத்தை பெருக்கவும், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும் வைகை அணையில் இருந்து தண்ணீர் வந்து ராமநாதபுரம், பரமக்குடி தாலுகாக்களில் மட்டுமே தண்ணீரை கண்மாய், குளங்க ளில் தேக்கி வைக்க முடிகிறது. ஆனால் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதி கண்மாய், குளங்கள், ஊரணிகள் வறண்டு காணப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து மாவட் டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து தர கண்மாய், குளம், ஊரணி களில் வைகை தண்ணீரை கொண்டு சென்று நிரப்புவ தற்கான திட்டத்தை செயல் படுத்த வேண்டும்.

    கண்மாய், குளம், ஊரணிகளை தூர்வாரியும், வரத்துக்கால்களை தூர் வாரியும் இனிவரும் பருவமழை காலங்களில் தண்ணீர் தேக்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே அபிராமம் பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    ×